25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

3 கோடி வெள்ளி எந்தெந்த தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டன? பட்டியல் வேண்டும் – சிவகுமார் வலியுறுத்து

🔥 Views : 10
👁 Reading Now : 69

2021 பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது. இந்த 3 கோடி வெள்ளி எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது என்பதை பட்டியலிட வேண்டும் என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு தொடக்கம் முதல் இதுநாள் வரை எத்தனை பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டன என்பதை கல்வி அமைச்சு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஆட்சியில் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டன ஆனால், பெரிகாத்தான் அரசாங்கத்தின் சார்பில் 3 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டது பெருத்த ஏமாற்றமாகும்.
இந்நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இந்த மூன்று கோடி வெள்ளி என்னவானது. இதுவரை எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப் பட்டிருக்கிறது என்பதை கல்வி அமைச்சு அறிவிக்க வேண்டும். சில தமிழ்ப்பள்ளிகள் தங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை என்று தன்னிடம் புகார் தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles