25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

வர்த்தகர்களுக்கு 30 விழுக்காடு மின்சார கட்டணக் கழிவு தேவை

தற்போது நடப்பிலிருக்கும் ஊரடங்கு மற்றும் கடுமையான நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு காரணத்தால் வர்த்தகத்துக்கு குறைந்தபட்சம் 30 விழுக்காடு மின்சாரக் கட்டணம் கழிவு வழங்கப்படவேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் ஜாசெக
கட்சியின் தலைமை செயலாளருமான வி. சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
covid-19 காரணத்தால்பெரும்பாலான வர்த்தகங்கள் எதிர்பாராத பாதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றன. பெரிய பெரிய தொழில் துறைகள் மட்டுமல்ல மாறாக சிறுதொழில் வணிகர்களும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
பல வர்த்தகர்கள் குறிப்பாக சிறு தொழில் வணிகர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் இந்தப் பிரச்சினையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது நாளொன்றுக்கு ஐயாயிரத்திற்கும் குறையாத covid-19 புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்த பாதிப்பில் இருந்துபொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் குறிப்பாக அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருந்து வரும் வணிகர்களின் படு மோசமான நிலை மீட்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
covid-19 பாதிப்பால் இந்த படம் வர்த்தகத் துறைக்கு சுமார் 10 விழுக்காடு மின்சார கட்டணம் விளக்கு வழங்கப்படும் என்று பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்திருந்தார்.
அவரது நோக்கம் மிகச் சரியானதாக இருந்தாலும் அந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை குறைந்தபட்சம் 30 விழுக்காடு மின்சார கட்டண கழிவு வழங்கப்பட வேண்டுமென்று வி சிவக்குமார் வலியுறுத்திக் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles