25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு

நடமாட்ட கட்டுபாடு உத்தரவு மற்றும் ஊரடங்கு தற்போது நடைமுறையில் இருப்பதன் விளைவாக பல வர்த்தக துறைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் அடுத்ததாக காய்கறி விற்பனை துறையும் பாதிப்பை எதிர்நோக்க தொடங்கி இருக்கிறது.
வியாபாரங்கள் ஏற்கனவே முடங்கிப்போய் இருக்கின்றன. இந்நிலையில் கேமரன் மலையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விலை தற்போது முப்பதிலிருந்து நாற்பது விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதனால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேமரன் மலையில் இருந்து தக்காளி, மிளகாய், வெள்ளரி, முட்டைகோஸ், குடைமிளகாய், பலதரப்பட்ட சாதவகைகள், பீன்ஸ் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் தருவிக்கப் படுகின்றன.
இந்த காய்கறிகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள மொத்த விற்பனை சந்தைகளுக்கு லாரிகளின் மூலம் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 565 மெட்ரிக் டன் காய்கறிகளை கேமரன் மலை விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். covid-19 பாதிப்பின் காரணத்தால் விநியோக நடவடிக்கைகளை வர்த்தகங்கள் ஆக கொண்டு செயல்படுபவர்கள்பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் கேமரன் மலையிலிருந்து வினியோகம் செய்யப்படும் காய்கறிகளில் தற்போது 40 விழுக்காடு காய்கறிகள் மட்டுமே சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன இதுவே விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது என்று மலேசிய காய்கறிகள் பயிரிடுவோர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles