31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சமையல் எண்ணெய் விலையேற்றம்! பெரிக்காத்தான் ஆட்சியின் “சாதனையா”

🔥 Views : 13
👁 Reading Now : 33

சாதாரண ஏழை பாட்டாளி மக்கள் முதல் பணக்காரர் வரையில் பயன்படுத்தும் 5 கிலோ சமையல் எண்ணெயின் விலை 17 வெள்ளியில் இருந்து 33 வெள்ளியாக உயர்ந்தற்கு யார் காரணம் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரன் கேள்வி எழுப்பினார்.
பக்தாத்தான் அரசு ஆட்சி அமைக்கும் போது 21 வெள்ளியாக இருந்த 5 கிலோ சமையல் எண்ணெய்யின் விலை 17 வெள்ளியாக குறைக்கப்பட்டது. ஆனால் வெறும் 16 மாதமாக ஆட்சியில் இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் அரசின் ஆட்சியில் 33 வெள்ளியாக ஆக அதன் விலை எகிறிப் போயுள்ளது.
பக்காத்தான் அரசு தனது 22 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வோருக்கு அவர்கள் இருந்தபோது செய்த சமையல் எண்ணெய்யின் விலைக்குறைப்பு சாதனையாகத் தெரியவில்லையா?
மக்களுக்கு 5 கிலோ எண்ணெய்யின் விலை அதிகமாக தெரிந்தால் , நெகிழிப் பையில் வரும் எண்ணெய் குறைவான விலையில் விற்கிறதே அதை வாங்கிக் கொள்ளலாமே என்று பெரிக்காத்தான் அமைச்சர் கூறியதாக தகவல் வந்துள்ளது!
இந்த நையாண்டி கேள்வி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருக்கின்றது என்று அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles