32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

காது கேளாத சிறுவனுக்கு 6,000 வெள்ளியில் காது கேட்கும் கருவி

🔥 Views : 10
👁 Reading Now : 57

ஜொகூர் குளுவாங் தாமான் மேகாவில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜொகூர் ம இ கா தொகுதி தலைவர் ராமன் முயற்சியால் 6,000 வெள்ளிக்கு காது கேட்கும் கருவி வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவனின் பெற்றோர் காய்கறி வியாபாரிகள் அவர். சாதாரண வீட்டில் இவர்கள் குடி இருக்கிறார்கள்.
இவர்களின் புதல்வர் டான் சாய் கிட் சிறு வயது முதல் காது கேளாத பிரச்சனையால் அவதியுற்று வருகிறார்.
சிறுவயதில் அவருக்கு பொருத்தப்பட்ட காது கேட்கும் கருவி இப்போது பயன்படுத்த முடியவில்லை இணையதளம் மூலமாக படித்து வரும் இவர் இதனால் பல சிரமங்களை எதிர் நோக்கினார்.
இந்த பிரச்சனை தம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது பாலகிருஷ்ணன் மற்றும் டத்தோ சாய் மூலமாக இந்த சிறுவனுக்கு 6,000 வெள்ளியில் காது கேட்கும் கருவியை வாங்கி பொருத்தப்பட்டு இருப்பதாக ராமன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles