27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

ஜொகூர் மாநில இந்தியர்களுக்கான கோவிட் கால சிறப்பு உதவி திட்டம்;
மனு பாரங்களில் அதிக கேள்விகள் ஏன்?

🔥 Views : 40
👁 Reading Now : 64

ஜொகூர் மாநில அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு சிறப்பு உதவி திட்டத்தை அறிவித்து அதை ஆட்சிக்குழு உறுப்பினர் இரா. வித்யானந்தன் மூலமாக அறிவித்திருக்கும் அந்த திட்டத்தில் இந்திய சமுதாயம் முறையாக பயன் அடைய முடியுமா என்ற ஐயம் தமக்கு எழுவதாக திரு ஆ.சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் வித்யானந்தன் ஜூன் 15 தேதியில் இருந்து அந்த உதவிக்கான மனுபாரங்களை பதிவு இறக்கம் செய்து அத்துடன் கேட்கப்பட்ட சில ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது கூறிப்பிடதக்கது.
இந்த கோவிட்-19 நோய் நடமாட்ட கட்டுபாடு காலக் கட்டத்தில் அந்த மனுபாரங்களில் கேட்கப் படும் பல பாரங்களை சேகரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே என தெரிவித்ததோடு, சூழ்நிலை இவ்வாறு இருக்க அந்த உதவிகள் கிடைக்க காலம் தாமதம் பிடிக்கும் என்பதை திரு வித்யானந்தாவிற்கு நினைவு படுத்துவதாக கூறிப்பிட்டார்.
மேலும், இன்றைய சூழ்நிலையில் மக்கள் அங்கும் இங்கும் அலைய முடியாது என்பதை மனதில் வைத்து எளிய முறையில் உதவி கிடைக்க வழி அமைத்து கொடுக்க வேண்டும் அதை விடுத்து கடமைக்கு உதவி திட்டம் என அறிவித்து விட்டு, அந்த உதவி கைக்கு சென்று அடையாமல் போய்விட்டால் ஏற்கனவே மன வேதனையில் இருக்கும் மக்களை மேலும் மன உளைச்சளுக்கு ஆளாக்க வேண்டாம் என நூசா பிஸ்தாரி கிளை தலைவருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles