28.3 C
Kuala Lumpur
Wednesday, August 12, 2026

Vetri

🗳️ ஜொகூர் தேர்தலில் 5 தொகுதிகளில் களமிறங்கும் எம்ஐபிபி!

🔥 Views : 2,459
👁 Reading Now : 20

வரவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) மொத்தம் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் என அதன் தேசியத் தலைவர் புனிதன் அறிவித்துள்ளார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூலை 11ஆம் தேதி மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேசியக் கூட்டணியின் (PN) கீழ் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் எம்ஐபிபி, தனது ஐந்து வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது.

அதன்படி, கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் அனா பிரவினா, புக்கிட் பெர்மாயில் லினா மனோ, பாலோவில் ஜீவகுமார், பெமானிஸில் டாக்டர் அர்விந்த் மற்றும் பெர்மாஸில் வேலா ஆகியோர் எம்ஐபிபி சார்பில் களமிறங்குகின்றனர்.

இந்தத் தேர்தல் எம்ஐபிபி கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும், ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற இறுதிவரை முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்றும் புனிதன் தெரிவித்தார். மேலும், கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கிய தேசியக் கூட்டணி தலைமைக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles