27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

நாடாளுமன்றம் இன்னிசை விடுதியை போன்றதா?

🔥 Views : 32
👁 Reading Now : 50

நாட்டில் 40 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்ட பின்னர் மூன்றாம் கட்ட மீட்சி திட்டத்தில் நாடாளுமன்றம் திறக்கப்படலாம் என்று கூறப்படுவதை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி இன்று சாடினார்.
நாடாளுமன்றம் ஒரு இன்னிசை விடுதியா என்று அவர் கேள்வி எழுப்பி எழுப்பி இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தாராளமாக நாடாளுமன்றத்தை கூட்டலாம்.
ஆனால் மூன்றாம் கட்ட மீட்சிக்குப் பின்னர் நாடாளுமன்றம் நடத்தலாம் என்று கூறப்படுவது அறிவுக்கு பொருந்தாத ஒன்று என அவர் சொன்னார்

நேற்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பேசுகையில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றம்
கூடலாம் என்றார்.
அப்போது
நாட்டின் நோய் எதிர்ப்பு சக்தி அடைவு நிலையை வைத்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற கூட்டம் எஸ்ஓபி விதிமுறைகளை பின்பற்றி முழு பாதுகாப்புடன் முறையாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles