27.7 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

ஜசெக மாநாடு ஒத்திவைப்பு!

🔥 Views : 33
👁 Reading Now : 34

ஜசெக பேராளர்கள் மாநாட்டை ஒத்திவைக்க அனுமதி தரும்படி சங்கங்களின் பதிவு இலாகாவிற்கு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, மலேசிய சங்கங்களின் பதிவு இலாகாவின் தலைவர் ஹாஜி ஜஸ்ரி பின் ஹாசிம் 11 ஜூன் 2021 தேதியில் ஜசெக தலைமையகத்திற்கு பதில் மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில், 3.0 பொது நடமாட்டக் கட்டுப்பாட்டிற்கு இணங்க, மலேசிய சங்கங்களின் பதிவு இலாகா பதிவு பெற்ற அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகள் உட்பட  ஆண்டு பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு தீர்மானித்துள்ளது.
ஜசெக கட்சியின் பேராளர் மாநாட்டிற்கான புதிய தேதியையும், கூடுதல் எஸ்ஓபி-யின் விதிமுறைகளை சமர்ப்பிக்குமாறு சங்கங்களின் பதிவு இலாகா கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகையால், 20 ஜூன் 2021 அன்று நடைபெறவிருந்த ஜசெக பேராளர்கள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறேன்.
எனவே, அரசாங்கத்தின் எம்.சி.ஒ முடிவடைந்த பிறகு தான், கட்சியின் பேராளர் மாநாட்டிற்கான புதிய தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றேன் என்று
ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles