31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பூ வியாபாரிகளின் பிரச்சனையில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன?

பூ வியாபாரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைக்கு அரசாங்கம் நியாமான அனுமதியை
வழங்குவதோடு,அதனை முறையாகவும் அறிவிக்க வேண்டுமென பாடாங் செராய் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா கேட்டுக் கொண்டார்.
பூக்கடைகளை திறக்கலாம் என
அமைச்சர் டத்தோ எம்.சரவணன் அறிவித்தார்.இருப்பினும் அதற்கு முறையான அனுமதி
கடிதங்கள் இல்லாதால், பூ வியாபாரிகள் போலீசார் மற்றும் உள்ளாட்சி அமலாக்க
அதிகாரிகளின் மிரட்டலுக்கும்,அதிகாரத்துக்கும் அச்சம் கொள்ளும் நிலையில் இருப்பதாக அவர்
சொன்னார்.
பேச்சளவில் அரசாங்கத்தின் உத்தரவை நம்பி,பணத்தையும் செலவு செய்து
பூக்களை வாங்கி குவித்து வைத்துக் கொண்டு,அதனை விற்க முடியாமால் அவதியுறும்
அவர்களின் அன்றாட பிழைப்பு என்னாவது என அவர் கேள்வியெழுப்பினார்.இப்பிரச்சனை
குறித்து தம்மிடம் பல புகார்கள் வந்தாலும்,நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முடிந்த
அளவுதான் உதவ முடியும்.இதற்கான முழு அதிகாரமும் தேசிய பாதுகாப்பு மன்றம்,அதன்
அமைச்சரின் கையில் தான் உள்ளது என கூறிய அவர் உடனடியாக அரசாங்கம் இப்பிரச்னைக்கு
தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles