31.2 C
Kuala Lumpur
Saturday, August 15, 2026

Vetri

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள்! மலாய் ஆட்சியாளர்கள் அதிரடி உத்தரவு!

🔥 Views : 37
👁 Reading Now : 22

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி மாட்சிமை தங்கிய மன்னர் தலைமையில் நடந்த மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையில் மலாய் ஆட்சியர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் மாட்சிமை தங்கிய மாமன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மாட்சிமை தங்கிய மாமன்னர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தித்து பேசினார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்று பற்றி விவாதம் செய்வதற்கு நாடாளுமன்றமே சிறந்த தளம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles