27 C
Kuala Lumpur
Friday, August 14, 2026

Vetri

உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்! இல்லையேல் பதவி விலகுங்கள்!

🔥 Views : 36
👁 Reading Now : 60

மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை விரைந்து கூட்டவேண்டும் என்று அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் பெரிதும் வரவேற்பதாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாமன்னரின் கட்டளைக்கேற்ப உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்.


ஒரு வேலை பிடிவாதமாக நாடாளுமன்றத் கூட்ட தவறினால் பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலகிக் கொள்ள வேண்டுமென அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்றை விவாதிக்க நாடாளுமன்றமே சிறந்த தளம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அரசியல் தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை ஏற்று நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles