27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

உண்மையான நண்பர்கள் யார்? இப்போது தெரிந்து கொண்டேன்!

🔥 Views : 10
👁 Reading Now : 69

நோய்த்தொற்று நெருக்கடி காலத்தில் உண்மையான நண்பர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டதாக ஏர் ஆசியா விமானச் சேவை குழுமத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி காலத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உண்மையான நண்பர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டார்.
பெரிய மனிதர்களிடம் குறுகிய சிந்தனையை காணமுடிந்தது. சாதாரண மக்களிடம் பெரிய உள்ளத்தை பார்க்க முடிந்தது.
19 ஆண்டுகளாக சிறு பங்குதாரர்கள் எங்களுடன் சேர்ந்து பெரும் பணம் சம்பாதித்தார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில் எங்களை தவிக்க விட்டு சென்று விட்டார்கள்.
இந்த சிரமமான காலத்தில் சிலர் எங்களை கைதூக்கி விட்டனர் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles