

சுபாங் சாலையில் அமைந்திருந்த அகோர வீரபத்திரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேலையில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் இந்திய பிரதிநிதிகளிடம் அறிவிக்காமல் இந்த ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 20 17 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை அகற்றும்படி பெட்டாலிங் மாவட்ட நிலா இலாகா நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆலயத் தலைவர் கணேசன் தலைமையில் ஆலய பொறுப்பாளர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவை சந்தித்துள்ளனர்.
ஆலயத்தை உடைப்பதை அவர் தடுத்து நிறுத்திய வேளையில் மாற்று இடம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
தற்போது நோய்தொற்று தாக்கத்தினால் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று பெட்டாலிங் மாவட்ட நில இலாகா அதிகாரி உத்தரவின்பேரில் இந்த ஆலயம் உடைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த ஆலயத்தை உடைக்கிறோம் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், புக்கிங் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ உட்பட இந்திய கவுன்சிலர்களிடம் தெரியப்படுத்தப் படவில்லை.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஆலயங்களும் இந்திய மாணவர்களுக்கும் மானியத்தை வாரி வழங்கி வருகிறது.
மாநிலத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்கியிருக்கிறது. உண்மை நிலை இப்படி இருக்கையில் இந்தியத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்படாமல் இந்த ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
அரசாங்க நிலத்தில் இந்த ஆலயம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்ற காரணத்திற்காக அது உடைக்கப் படுகிறது என்று நில இலாகா அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் இந்த ஆலயத்தை
உடைக்க வேண்டிய அவசியம் என்னவென்று மலேசிய இந்திய மக்கள் சமூக நல மன்ற தலைவர் டாக்டர் பாஸ்கரன் கேள்வி எழுப்பினார்.
