27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கோவிட் தடுப்பூசி விற்பனை! 3 ஆடவர்கள் கைது

🔥 Views : 11
👁 Reading Now : 44

கோவிட் தடுப்பூசிகள்
தொலைபேசி வழி விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் இன்று புத்ரா ஜெயா மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் கைது செய்தனர்.
23 முதல் 50 வயது வரையிலான இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை கைது செய்திருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு பாக்கார் கூறினார்.
தடுப்பூசி சிறப்பு பணிக்குழுவின் ஆய்வு அதிகாரி ஒருவர் செய்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரிகளாக பணியாற்றி வந்த அம்மூவரும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அவர் மேலும் சொன்னார்.
இரண்டு முறை தடுப்பூசிகளுக்கு 420 வெள்ளி கட்டணம் விதித்துள்ளனர்.
விசாரணைக்காக இவர்கள் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles