27.9 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

நோய்த் தொற்று காரணமாக 8 வயது சிறுவன் உள்பட 84 பேர் இன்று பலி

🔥 Views : 34
👁 Reading Now : 69

நாட்டில் இன்று நோய்த் தொற்றுக்கு எட்டு வயது சிறுவன் உட்பட 84 பேர் பலியாகியுள்ளனர்
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் காலமானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
ஒருவகை நரம்பு மற்றும் தசை நோயினால் பீடிக்கப்பட்ட 16 வயது இளைஞரும் கோவிட்-19 நோய் காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நோய்த் தொற்றுக்கு இன்று பலியானவர்களில் 12 பேர் 24 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் ஆவார்.
இன்று சிலாங்கூரில் 32 பேர் மரணமடைந்தனர். கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தலா 10 பேரும் கிளந்தானில் எண்மரும் ஜொகூரில் எழுவரும் கெடாவில் அறுவரும் இந்நோய்க்கு பலியாகினர் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles