
வரும் ஜூன் 28ஆம் தேதி முதல் சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 20 இடங்களில் தடுப்புசி போடும் மையங்கள் திறக்கப்படவுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்குவதற்கு ஏதுவாக செல்கேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனம் இந்த தடுப்பூசி போடும் மையங்களை திறக்கிறது.
பெட்டாலிங் ஜெயா டிரோப்பிகானா மால், பாங்கி ஈவோ மால், கிளானா ஜெயா பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ், ஷா ஆலம் டி பால்மா ஹோட்டல், புக்கிட் ஜாலில் அவுரா மால் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் செயல்படும் என்று செல்கேட் தெரிவித்துள்ளது.
