29 C
Kuala Lumpur
Tuesday, October 6, 2026

Vetri

முள்வேலிக் கம்பிக்குள் சுங்கை லீனாவ், சிப்பாங் தோட்டப் பாட்டாளிகள்!
கவுன்சிலர் சிவகுமார் தலைமையில் உதவிகள் விரைந்தன

🔥 Views : 57
👁 Reading Now : 30

நோய்த்தொற்று தாக்கத்தினால் சிப்பாங் வட்டாரத்திலுள்ள சுங்கை லீனாவ் மற்றும் சிப்பாங் தோட்டத்தில் முள்வேளிக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுங்கை லீனாவ் தோட்டத்தில் 16 குடும்பங்களும் சிப்பாங் தோட்டத்தில் 28 குடும்பங்களும் உள்ளன.
முழுமையான நடமாட்டம் உத்தரவால் தோட்டப் பாட்டாளிகள் வெளியே வர முடியவில்லை.
வெளியிடங்களில் வேலை செய்யும் மக்களும் தோட்டத்தை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை. ஜூன் 21ஆம் தேதி தேதி முதல் 28ஆம் தேதி வரை இங்கு முழு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தோட்டங்களிலும் மொத்தம் 44 குடும்பங்கள் உள்ளன. இதில் 80 விழுக்காடு இந்தியர்கள் ஆவார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ சேவை மையத்தின் மூலமாக சிப்பாங் கவுன்சிலர் சிவகுமார் தலைமையில் இன்று தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles