28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இந்திய முதியவர்கள் முன் வர வேண்டும்!

🔥 Views : 9
👁 Reading Now : 33

கோவிட் -19 நோய்க்கான தடுப்பூசி மையங்களை அமைத்து அரசாங்கம்
மேற்கொண்டு வரும் நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டுவதாக நிபோங்
திபால் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோர் ஒஸ்மான்
கூறினார். இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இந்திய முதியவர்கள் முன் வரவேண்டும்.இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் இந்தியர்களின்
பங்களிப்பு குறைவாக உள்ளது என்றார்.
மேலும் இவர்களுக்கு தேவையான
உதவிகள் வழங்க அரசு சாரா இயக்கங்கள்,அரசியல் கட்சிகள்,தன்னார்வ
அமைப்புகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர்
வலியுறுத்தினார்.
நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் செயல்பட்டு
வரும் தடுப்பூசி மையங்களை பார்வையிட்ட உயர்கல்வி துணை
அமைச்சருமான அவர் இவ்வாறு சொன்னார்.
இவருடன் தென் செபராங் பிறை
மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ சோங் செர்ன்
உடனிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles