
சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவருக்கும் எதிராக அவதூறு செய்திகளைப் பரப்பியதற்காக அவர் மீது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு அண்மையில் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தயாளன் 95 ஆயிரம் ரிங்கிட் தொகையை நஷ்ட ஈடாக விக்னேஸ்வரன்-சரவணன் இருவருக்கும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இயங்கலை வழியாக நடத்தப்பட்ட இந்த வழக்கு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
அதன் பின்னர் நீதிபதி டத்தோ அகமட் பின் பாச்சே தனது தீர்ப்பை வழங்கினார்.



