25.3 C
Kuala Lumpur
Thursday, August 20, 2026

Vetri

கைது செய்யப்பட்ட 18 டுரியான் தோட்டக்காரர்களுக்கு ஜசெக சட்ட உதவிகள்

🔥 Views : 33
👁 Reading Now : 45

பகாங் மாநிலத்தில் ரவூப்பில் 100 ஹெக்டர் நிலப்பரப்பில் முசா கிங் டூரியான் தோட்டத்தை அழிக்கும் பணியில் பகாங் காட்டு இலாகா அதிகாரிகள் ஈடுபட்டபோது டூரியான் தோட்டக்காரர்கள் அதை தடுக்க முயற்சித்தனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் அத்துமீறி நுழைந்தது தொடர்பில்
18 டூரியான் தோட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று ராவூப் நீதிமன்றத்துக்கு இவர்கள் கொண்டுவரப்பட்டனர். இன்று காலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ரவூப் தெராஸ் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சாவ் யூ ஹூய் தெரிவித்தார்.
இதனிடையே ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த 18 டூரியான் தோட்டக்காரர்களுக்கு சட்ட உதவிகளை ஜசெக வழங்கும் என்று அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles