25.3 C
Kuala Lumpur
Thursday, August 20, 2026

Vetri

நாடாளுமன்றம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்!அமைச்சர்களின் விரிவுரைகளை கேட்கும் இடம் அல்ல!

🔥 Views : 32
👁 Reading Now : 55

மலேசியா நாடாளுமன்றம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கெஅடிலான் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஐந்து நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எப்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பயனாக இருக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்றம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் தவிர அமைச்சர்களின் விரிவுரை களை கேட்கும் இடம் அல்ல என்று அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்போது நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த அரசாங்கம் முன்வந்திருப்பது ஒரு அரசியல் நாடகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles