28.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

12 மணி நேரத்திற்கு பின்னரே திருச்சி புறப்பட்டது மலேசியன் ஏர்லைன்ஸ்!

🔥 Views : 11
👁 Reading Now : 42

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சிறப்பு முகப்பிட சேவையில் ஏற்பட்டிருக்கும் பெரும் சுணக்கத்தால் 12 மணி நேரத்திற்கு பின்னர் இன்று காலையில் திருச்சியை நோக்கி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டதாக என்று கேபிஎஸ் டிராவல்ஸ் உரிமையாளர் கே.பி சாமி தெரிவித்தார்.
நாட்டில் கூடுதலாக தங்கி இருக்கும் அந்நியப் பிரஜைகள் 500 வெள்ளி அபராதம் செலுத்தி தாயகம் திரும்ப குடிநுழைவு துறை இலாகா அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக விமான நிலையத்தில் சிறப்பு முகப்பிடச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் முகப்பிட சேவையில் குறைந்த அதிகாரிகள் இருப்பதால் தாயகம் திரும்பும் அந்நிய பிரஜைகளின் ஆவணங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படுவதாக அவர் சொன்னார்.
இதனால் பல அந்நிய பிரஜைகள் குறிப்பிட்ட நேரத்தில் விமானம் மூலம் தாயகம் திரும்ப முடியாமல் பறி தவிர்க்கிறார்கள்.
நேற்று மாலை ஆறு மணிக்கு திருச்சி நோக்கி புறப்பட வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 12 மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர் இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.


கே பி எஸ் டிராவல்ஸ் மற்றும் எஸ் எம் ஆர் டிராவல்ஸ் மனோ சார்பில் மலேசியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கடைசி பயணியும் அபராதம் செலுத்தி விமானத்தில் ஏற முடிந்தது.
அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏற வேண்டும் என்பதற்காக எங்களின் வேண்டுகோளை ஏற்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 12 மணி நேரம் காக்க வேண்டி வந்ததாக அவர் சொன்னார்.
இன்று அந்த விமானத்தில் 120 பயணிகள் பத்திரமாக தாயகம் திரும்பினர் என்று கேபி சாமி ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles