28.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

நோய் தொற்றினால் இறந்த 1,232 குடும்பங்களுக்கு 61 லட்சத்து 60 வெள்ளி உதவித்தொகை

🔥 Views : 10
👁 Reading Now : 24

கோவிட் நோய்த் தொற்றினால் மரணமடைவோர் குடும்பத்திற்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் 5,000 வெள்ளி வழங்கப்படுகிறது.
இந்த வகையில் இதுவரை 1,232 குடும்பங்களுக்கு 61 லட்சத்து 60,000 வெள்ளி வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ரெட்ஜூவான் இன்று அறிவித்தார்.
5,000 வெள்ளி உதவித்தொகைக்காக 1,500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதில் 1,232 விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உடனடி உதவி, குடும்பத்தின் சுமையை குறைப்பதாகும், ஏனெனில் இறந்தவர் வீட்டுத் தலைவராக இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
இன்னும் 300 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது என்றும், போதுமான தகவல்கள் இல்லாததால் சில நேரங்களில் சரிபார்ப்பு நேரம் எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles