
நாட்டில் புதிதாக 30 நோய்த்தொற்று மையங்கள்
மையங்கள் அடையாளம் காண பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
வேலையிட தொற்று மையங்ளைக் காட்டிலும் சமூக தொற்று மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த முப்பது தொற்று மையங்களில் 16 மக்களிடையே பரவியவை. மேலும் எட்டு வேலையிடங்களை மையமாக கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
இது தவிர நோய்த் தாக்கம் அதிகம் கொண்ட நான்கு தொற்று மையங்கள், மற்றும் ஒரு உயர்கல்விக் கூட தொற்று மையம் ஆகியவை நேற்று அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.
கிளந்தானில் மிக அதிகமாக ஆறு சமூக தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
