28.5 C
Kuala Lumpur
Tuesday, July 21, 2026

Vetri

ஓப்பந்த மருத்துவர்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர்

🔥 Views : 19
👁 Reading Now : 28

நாட்டில் பொது மருத்துவமனைகளில் பணி புரியும் ஒப்பந்த மருத்துவர்கள் இன்று காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டாலும் ஒப்பந்த மருத்துவர்கள் அமைதியான முறையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இந்த மறியலில் ஈடுபட்டனர்.
கோலாலம்பூர், கிள்ளான், சுங்கை பூலோ மருத்துவமனைகள் மற்றும் செர்டாங் மேப்ஸ்
ஆகிய இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்கள் ஒருசேர இந்த மறியலில் பங்கேற்றார்கள்.
மேலும் நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் மருத்துவர்கள் இந்த அமைதி மறியலில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles