
நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தக்கியூடின் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அவசர காலத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து சட்டங்களும் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு இந்த அவசர காலத்தை நீட்டிக்க அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கவில்லை. கடந்த ஜூலை 21ஆம் தேதியோடு அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி குரல் கொடுத்தனர்.
அப்போது இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் இந்த அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
