29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மீண்டும் பிரதமரின் இல்லத்திற்கு விரைந்த அமைச்சர்கள், சட்டத்துறை தலைவர்!

🔥 Views : 10
👁 Reading Now : 61

கோலாலம்பூர் புக்கிட் டாமன்சாராவில் உள்ள பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இல்லத்திற்கு அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் விரைந்துள்ளனர்.
அவசரகால உத்தரவு மீட்டுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்று இன்று இஸ்தானா நெகாரா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஜூலை 21 ஆம் தேதியோடு இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் நாடாளுமன்றத்தில் செய்த அறிவிப்பு தவறானது.
இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும்
சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பால் மாட்சிமை தங்கிய மாமன்னர் பெரும் வருத்தம் அடைந்திருக்கிறார் என்று அரண்மனை அறிவித்துள்ளது.
இதனால் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
தற்போது அமைச்சர்களும் சட்டத்துறை தலைவரும் பிரதமர் இல்லத்திற்கு விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles