29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

‘தேச துரோகம்’ ‘தேச துரோகம்’ பதவி விலகு முழக்கத்தால் நாடாளுமன்றம் அதிர்ந்தது!

🔥 Views : 8
👁 Reading Now : 50

அவசர காலச் சட்டத்தை மீட்டுக் கொள்வதன் தொடர்பில் மாமன்னரிடம் ஒப்புதல் பெறவில்லை என்று அரண்மனை அதிகாரி வெளியிட்ட அறிக்கையை டத்தோஸ்ரீ அன்வார் அன்வார் வாசித்தபோது ‘தேச துரோகம்’, ‘தேச துரோகம்’; ‘பதவி விலகு பதவி விலகு முழக்கங்களால் இன்று நாடாளுமன்றமே அதிர்ந்தது.
சட்ட அமைச்சர் தக்கியுடின் நாடாளுமன்றத்தை குழப்பத்தில் ஆழ்த்தியதுடன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அரசு அரசியல் சாசனத்தையும் மதிக்கவில்லை; அரண்மனைக்குரிய மாண்மையும் போற்றவில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாக சாடினார்.
அவசரகாலச் சட்டத்தை மீட்டுக் கொள்வது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை அரசியல் சாசன விதி 150 தெளிவாக வரையறுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், மாமன்னரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமலோ அவரின் ஒப்புதலைப் பெறாமலோ அவசரகாலச் சட்டத்தை மீட்டுக் கொண்டிருப்பது, அரசாங்க நடைமுறையில் நெருக்கடியை மட்டும் ஏற்படுத்தவில்லை; இந்த நாடாளுமன்றத்தையும் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மாமன்னர் மிகுந்த வருத்தத்திற்கு ஆட்பட்டுள்ள இந்நிலையில், உண்மை நிலையை இந்த அவைக்குத் தெரிவிக்காத பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலக வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles