29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

உளவியலாளர்களின் திறனை அரசாங்கம் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 53

நோய்த்தொற்று சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் இந்த காலக் கட்டத்தில் மக்களுக்கு உளவியல் சம்பந்தமான ஆலோசனைகள் தேவைபடுவதாக உளவியல் மற்றும் நிர்வாக துறை பட்டதாரியான சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடுகளான சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இத்துறைக்கு முக்கியதுவம் கொடுக்கபடுகிறது. ஆனால் நமது நாட்டில் இத்துறைக்கான தேவையும் ஆர்வமும் குறைவாகவே உள்ளது என அவர் கூறிப்பிட்டார்.
மேலும் நமது நாட்டில் மனோவியல் துறைக்கு நமது மாணவர்கள் அவ்வளவாக விருப்பம் காட்டுவதில்லை.
சில தினங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா கூறுகையில் மலேசியாவில் மனோவியல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்க உளவியாளர்கள் குறைவாகவே உள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த கோவிட்-19 காலகட்டத்தில் மக்கள் பல வகையில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை இந்த உளவியாளர்கள் மட்டுமே வழங்க முடியுமே தவிற மத போதர்கள் அல்ல என அவர் நினைவு படுத்தினார்.
எனவே,இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அத் துறைக்கான அங்கிகாரத்தை வழங்கி,அந்த துறையில் பட்டம் பெற்றவர்களின் திறைமையை பயன் படுத்தி கொள்ள வேண்டும் என சமூக ஆர்வாளருமான சந்திர சேகரன் கேட்டுகொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles