
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டும் பணியில் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
புத்ரா உலக வாணிப மையத்தின் அருகில் உள்ள ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் அவர் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை துணை அமைச்சர் சஹிடி ஜைனூல் ஆகியோரும் உள்ளனர்.
அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி க்கு எதிராக இவர்கள் உள்ளனர்.
அம்னோ எம்பிக்கள் பிரதமருக்கு ஆதரவு தரும் வகையில் ஆதரவை திரட்டிக் கொண்டு இருக்கிறோம் என்று சஹிடி தெரிவித்தார்.
