25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கேபிஎஸ் டிராவல்ஸ் ஏற்பாட்டில் அந்நியத் தொழிலாளர்களுக்கு இலவச கோவிட் பரிசோதனை

🔥 Views : 7
👁 Reading Now : 50

கிள்ளான் நகரில் இயங்கி கொண்டிருக்கும் கேபி எஸ் டிராவல்ஸ் மற்றும் எஸ்எம்ஆர் மனோ டிராவல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை 15ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிள்ளான் கேபிஎஸ் அலுவலகத்தில் அந்நியத் தொழிலாளர்களுக்காக இலவச கோவிட் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
நோய்த்தொற்றால் மரணம் அடையும் அந்நியத் தொழிலாளர் கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்காக இந்த இலவச கோவிட் மருத்துவப் பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கே.பி. சாமி தெரிவித்தார்.
தங்களுக்கு நோய் தொற்று இருக்கிறதா என்பதை இலவசமாக பரிசோதித்து கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி அந்நியத் தொழிலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.


மலேசிய பிரஜைகளும் இந்த இலவச மருத்துவ பரிசோதனையும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்புக்கு
கேபி சாமி 016-2626755 அல்லது நிர்வாகி கவின் 016-2229341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles