25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

இப்போது அன்வார் வேண்டும்; ஜசெக வேண்டும்; முன்பு எதிர்ப்பு தெரிவித்த அம்னோ எம்பிக்கள் எங்கே?

🔥 Views : 9
👁 Reading Now : 45

பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் பேசப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இப்போது அழைப்பு விடுத்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டாம் மற்றும் ஜசெக வேண்டாம் என்று முழங்கிய டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கும் அம்னோ எம்பிக்கள் நிலைப்பாடு இப்போது என்ன என்று சிலாங்கூர் தேசிய முன்னணி தகவல் தலைவர் இஸாம் கேள்வியை எழுப்பியுள்ளார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கும் அம்னோ எம்பிக்களான டான்ஸ்ரீ அனுவார் மூசா மற்றும் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் இப்போது பிரதமரின் திட்டத்தை ஆதரிக்கிறீர்களா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
முன்பு அன்வார் இப்ராகிம் வேண்டாம், ஜசெக வேண்டாம் என்று சொன்னவர்கள் இப்போது அன்வார் இப்ராஹிம் வேண்டும், ஜசெக வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அப்படியானால் உங்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை ஆதரிக்கும் அம்னோ எம்பிக்களிடம் அவர் கேள்வியை முன் வைத்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles