
சித்தம்“ எனப்படும் ஹிஜ்ரா சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டிலான வர்த்தக கடனுதவி திட்டத்திற்கு ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். தொழில் முனைவோரிடமிருந்து கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக வரும் 19 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சித்தம் அமைப்பின் நிர்வாகி தீபன் சுப்பிரமணியம் ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது
இந்த அமோக ஆதரவை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை நீட்டிக்க முடிவு செய்தோம் என்றார் அவர்.
ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவி திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒருகோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
