
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்து நாளை 4 மணிக்குள் சத்தியப் பிரமாணத்துடன் இஸ்தானா நெகாராவில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டத்தோ அஸாஹர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் வேட்பாளருக்கு ஒருவர் பெயரை மட்டுமே முன்மொழிய வேண்டும்.
நாட்டின் ஒன்பதாவது பிரதமராக பொறுப்பேற்பதற்கு தகுதியான ஒருவரை நீங்கள் முன்மொழிய லாம்.
வழக்கறிஞர் அல்லது சத்தியப் பிரமாண ஆணையரின் அதிகாரபூர்வ முத்திரை மற்றும் கையெழுத்து இடப்பட்ட சத்தியப்பிரமாணம் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை 4 மணிக்குள் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தொலைநகல், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலமாக PDF வடிவில் சத்திய பிரமாணத்தை மாமன்னரின் மூத்த செயலாளர் டத்தோ நாசிம் முகமட் அலிமிடம் அனுப்பி வைக்கும்படி டத்தோ அஸாஹர் கேட்டுக்கொண்டார்.
தாமதமாக அனுப்பப்படும் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார் அவர்.
