
புதிய அமைச்சரவையின் தணைப் பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவு செய்வார்கள்.
துணைப் பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இவ்விரு தலைவரிடம் விட்டுவிடுகிறோம் என்று பெர்சத்து கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
துணை பிரதமர் பதவி பெர்சதீது கட்சிக்கு வழங்கப்பட்டால் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வோம் என்றார் அவர்.



