25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மீரா கட்சிக்கு இடைக்கால தலைவரானார் கே.பி.சாமி!

🔥 Views : 6
👁 Reading Now : 63

சிறுபான்மை உரிமைகள் செயல் கட்சி என்றழைக்கப்படும் மீரா கட்சிக்கு இடைக்காலத் தலைவராக கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி கே.பி. சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசியா அரசியல் வானில் அனுபவமிக்க அரசியல்வாதியாக விளங்கும் கே.பி. சாமி மீரா கட்சிக்கு இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை கட்சி செயலாளர் கண்ணன் ராமசாமி உறுதிப்படுத்தினார்.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் கே.பி. சாமி இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
நடப்பு இடைக்காலத் தலைவர் பிரான்ஸ் சிவா காலமானதைத் தொடர்ந்து அனுபவம் வாய்ந்த கே.பி. சாமி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் கால் பதித்த கே.பி. சாமி தலைமையில் இனிமேல் மீரா கட்சி சிறந்த முறையில் வெற்றி நடைபோடும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே நாடு தழுவிய அளவில் புதிய கிளைகள் அமைக்கப்படும் என்று மீரா கட்சியின் தலைவர் கே.பி.சாமி தெரிவித்தார்.
இந்தியர்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்காக போராடும் ஒரு கட்சியாக மீராவை உருவாக்குவேன் என்று அவர் சூளுரைத்தார்.
எனது தலைமையில் பல தலைவர்கள் கட்சியில் சேர்வதற்கு முன் வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles