
நோய்த்தொற்றை கட்டுபடுத்த உதவும் வகையில் இதர மாநிலங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகளை வழங்கிய சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
மற்ற மாநிலங்கள் மீது அக்கறை கொண்டு சிலாங்கூர் மாநில அரசு செய்த இந்தப் பணிகளுக்கு மாநில சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் முயற்சிக்கு உதவக்கூடிய சரியான திட்டம் இது என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் முக்கியப் பங்கினை ஆற்றும் இந்த தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் பொதுமக்களும் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
