25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் சக்தி கட்சியின் மக்கள் நலச்சேவை

🔥 Views : 9
👁 Reading Now : 37

மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற உன்னத சிந்தனையோடு நிபோங் திபால் நாடாளுமன்றத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் மக்கள் சேவை சிறப்பாக இயங்கி வருகிறது என்றால் அது மிகையாகாது.
கட்சியின் தொகுதி தலைவராக செயலாற்றி வரும் மாஸ்டர் கவிக்குமார் இரவிச்சந்திரன், நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள சுங்கை பாக்காப், ஜாவி,சுங்கை ஆச்சே ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் களமிறங்கி தமது மக்கள் பணியை செய்து வருகிறார்.
உதவிகள் தேவைப்படும் இந்தியர்களுக்கு அவ்வப்போது உணவுப் பொருட்கள் உட்பட சுகாதாரம்,கல்வி,நிதியுதவி ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்.
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் ஆதரவோடு,தமது கிளைப் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு தொகுதியிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் சிறந்த மக்கள் நலச் சேவையை வழங்கி வருவதாக மாஸ்டர் கவிக்குமார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles