30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சட்டத்துறை தலைவரின் அறிக்கை மாமன்னர் உத்தரவுக்கு எதிரானது; பக்கத்ததான் ஹரப்பான் தலைவர்கள் சாடல்!

🔥 Views : 8
👁 Reading Now : 35

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர தேவையில்லை என்று சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ரிஸ் ஹருண் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முகமட் சாபு மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிரதமராக மாமன்னர் நியமித்து உள்ளார். ஆகவே பிரதமருக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் தேவையில்லை என்று சட்டத் துறைத் தலைவர் அறிவித்திருப்பது மாமன்னரின் உத்தரவுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர். சட்டத்துறை தலைவரின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. மாமன்னர் உத்தரவுக்கும் கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இவர் நடந்து கொள்கிறார் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles