30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

உணவு தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக புலன் விசாரணை அறிக்கை தயார்

🔥 Views : 6
👁 Reading Now : 21

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரே வாரத்தில் இரண்டு முறை நீர் விநியோகம் தடைப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். செமினி ஆற்று நீர் சுத்திகரிப்பு தேக்கத்தில் நீர் விநியோகம் ஒரே வாரத்தில் இரண்டு தடவை தடைபடுவதற்கு பெர்னாங்கில் உள்ள உணவு தொழிற்சாலை கழிவே காரணம் என்று நீர் சுற்றுச்சூழல் அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக குற்றம் சாட்டும் வகையில் புலன் விசாரணை அறிக்கையை சிலாங்கூர் சுற்று சூழல் தயார் செய்திருப்பதாக அமைச்சு அறிவித்துள்ளது. உணவு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவுநீரால் இரண்டு முறை நீர் விநியோகம் தடைபட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் அவதியை எதிர்நோக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles