
கிள்ளான் செந்தோசா வட்டாரத்தில் ‘பசுமை – தூய்மை’ என்னும் இலக்குடன் இங்குள்ள ராஜா நோங் சாலை நெடுகிலும் இன்று 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இவற்றில் நூறு மரக்கன்றுகளை ‘அறிவா ஜெனரல் செர்வீசஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அறிவா அன்பளிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்கள் நல சேவையில் சுற்று வட்டார அரசுசாரா அமைப்புகள், வழிபாட்டு தலங்கள், ‘த்சூ ச்சி’, ‘இன்னர் வீல்’, ரோட்டரி கிளாப் போன்ற தன்னார்வ அமைப்புகள், வழிபாட்டு தலங்களின் சார்பில் திரு. ரோபர், திரு. சந்திர சேகரன், டத்தோ சுப்பிரமணியன் நடேசன், செந்தோசா தொகுதி நலக்குழு உறுப்பினர்கள், செந்தோசா சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னை இணைத்துக் கொள்ளும் ‘செந்தோசா ஸ்குவாட்’ அமைப்பினர் ஆகிய தரப்பினரின் ஒருங்கிணைப்பில் இந்த சமூக நல நிகழ்வு நடைபெற்றது. இந்தப் ‘பசுமை – தூய்மை’ நிகழ்ச்சி இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் தொடரப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கரம் நீட்டி, தோள் கொடுத்த அனைவருக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பிகேஆர் பிரமுகருமான டாக்டர் ஜி.குண்ராஜ் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
