
நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ சிலாங்கூர் அரசு 6 லட்சம் வெள்ளியை கிந்தா சிலாங்கூர் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் இந்த உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் இத்திட்டத்திற்கு மாநில அரசு 6 லட்ச வெள்ளியை ஒதுக்கீடு செய்தது மிகவும் வரவேற்கக்கூடிமது. இதுவரை 232,500 வெள்ளி அதாவது 465 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
