
விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்க பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும்படி உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார். உணவு மற்றும் பொருள் விநியோகத் துறையில் ஈடுபட்டவர்கள் காப்புறுதி பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் முதலாளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆகவே, மோட்டார் சைக்கிளோட்டிகள் பயணத்தின் போது மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர். சாலை பாதுகாப்பு மட்டுமின்றி நமது உடலாரோக்கியமும் மிக முக்கியமாகும். ஆகவே உரிய காப்புறுதி பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.